Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

பேமென்ட் டொமைன் – 1

$
0
0

Image result for payment domain

பேமென்ட் டொமைன்

(Payment Domain)

டொமைன் ஸ்கில்ஸ்(Domain Skills) எனப்படும் தள அறிவு இன்றைய தொழில் நுட்ப உலகில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. டொமைன் ஸ்கில்ஸ் இருப்பவர்களுக்குத் தான் நிறுவனங்களில் அங்கீகாரமும், வளர்ச்சியும் கிடைக்கிறது. தொழில்நுட்பங்கள் தினம் தோறும் மாறிக்கொண்டே இருந்தாலும், டொமைன் என்பது மாறாதது. அல்லது, தொழில்நுட்பத்தின் மாற்றத்தின் வேகத்தோடு ஒப்பிடுகையில் டொமைன் மிக மெதுவாகவே மாற்றங்களைச் சந்திக்கிறது.

நீங்கள் ஒரு டெவலப்பராகவோ, டெஸ்டராகவோ, மேனேஜராகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் அடிப்படையான தொழில்நுட்பமாக இந்த டொமைன் ஸ்கில்ஸ் இருக்கிறது. 

இன்றைக்கு மிக முக்கியமான டொமைன்களாக இருப்பவை வங்கி, காப்பீடு, ரீடெயில், ஹெல்த்கேர், பேய்மென்ட் போன்றவை. இவற்றில் பேய்மென்ட் டொமைன் குறித்த முக்கியமான தகவல்களை இந்த குறுந்தொடரில் பார்க்கலாம்.

அதென்ன பேமென்ட் டொமைன் ? 

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் போய் பொருட்களை வாங்குகிறீர்கள். பின்னர் பணம் செலுத்துமிடத்தில் வந்து உங்களுடைய கார்டைக் கொடுக்கிறீர்கள். அவர் அதை பி.ஓ.எஸ் (POS ) பாயின்ட் ஆஃப் சேல் (Point of Sale ) எனும் கருவியில் சொருகியோ, தேய்த்தோ, காட்டியோ டிஜிடல் பரிவர்த்தனை செய்து விட்டு உங்களிடம் கார்டையும் பொருட்களையும் கொடுப்பார்.

அல்லது உங்களுடைய மொபைலில் நீங்கள் ஒரு ஆன்லைன் பரிவர்த்தனையைச் செய்வீர்கள். தேவையான பொருளை ஒரு இணைய தளத்திலிருந்து வாங்கிவிட்டு சில வினாடிகளில் உங்களுடைய வேலையை முடித்துக் கொள்வீர்கள். 

அல்லது ஒரு ஏதோ ஏடிஎம் முன்னால் சென்று நின்று நீங்கள் உங்களுடைய கார்டைக் கொடுத்து பணம் எடுப்பீர்கள். ஏதோ ஒரு வங்கியில் இருக்கின்ற உங்கள் பணத்தை, வேறு ஏதோ ஒரு வங்கியின் ஏடிஎம் உங்களுக்கு வழங்கும். 

வெளிப்பார்வைக்கு எளிமையாகத் தோன்றுகின்ற இந்தப் பரிவர்த்தனைகள் என்ன நடக்கின்றன ? எப்படி வங்கிகள் தங்களுக்குள் பணத்தை சரிபார்த்துக் கொள்கின்றன ? எப்படி கடைகளுக்குப் பணத்தை வழங்குகின்றன. எப்படி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்குகின்றன. இவற்றுக்கு இடையே நடக்கின்ற பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றன ? போன்ற அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய புரிதல் தான் பேய்மென்ட் டொமைன் ஸ்கில் என்பது.

முதலில் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். நீங்கள் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போய் பொருட்களை வாங்கிவிட்டு ஒரு கருவியில் கார்டைக் கொடுப்பீர்களல்லவா ? அந்த பி.ஓ.எஸ் மெஷின் ஏதோ ஒரு வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும். 

அடுத்த முறை நீங்கள் கார்டைக் கொடுத்து விட்டு பின் நம்பர் என்டர் பண்ணும்போது கவனித்துப் பாருங்கள். அந்த பி.ஓ.எஸ் மெஷினில் ஒரு வங்கியின் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அந்த வங்கி தான் அந்த பி.ஓ.எஸ் மெஷினோடு இணைக்கப்பட்டிருக்கும் வங்கி. 

அந்த வங்கியை “அக்யூரர்” பேங்க் (Acquirer Bank) என்று அழைப்பார்கள். அதாவது சேவை வாங்குபவர் என்று புரிந்து கொள்ளலாம். 

நாம் பயன்படுத்தும் அட்டையை வேறு ஏதோ ஒரு வங்கி வழங்கியிருக்கலாம். அந்த வங்கியை இஸ்யூவர் பேங்க் (Issuer Bank)  என்பார்கள். ‘வழங்குபவர்’ என புரிந்து கொள்ளலாம். 

இந்த இரு வங்கிகளும் தனித்தனியே தங்களுக்கென மென்பொருட்களை வைத்திருப்பார்கள். நெட்வர்க் கனெக்ஷனை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு வங்கியின் கணக்கு வழக்குகளை அந்த மென்பொருட்கள் கவனித்துக் கொள்ளும். 

அப்படியானால் இரண்டு தனித்தனி நெட்வர்க்களில் இயங்குகின்ற இரண்டு வங்கிகளுக்கான பரிவர்த்தனைகளை எப்படி இணைப்பது ? மொத்தமாகவே இரண்டே இரண்டு வங்கிகளென்றால் பரவாயில்லை, உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான வங்கிகளை எப்படி ஒன்றோடொன்று இணைப்பது ?

அதற்காக இருப்பது தான் பேய்மென்ட் சிஸ்டம்ஸ் (payment Systems). இது கார்ட் வாங்குபவர்களையும், வழங்குபவர்களையும் இணைக்கின்ற ஒரு மென்பொருள் பாலம். 

இரண்டு வங்கிகளுக்கு இடையே நடக்கின்ற அத்தனை கார்ட் பரிவர்த்தனைகளும் சர்வ நிச்சயமாக ஒரு பேய்மென்ட் செயலாக்கக் கட்டமைப்பு வழியாகத் தான் சென்றாக வேண்டும். 

இந்த பேய்மென்ட் கேட்வே, அல்லது சுவிட்ச், அல்லது பேமென்ட் புராசசிங் மென்பொருள் நிறுவனம் இந்த சேவைக்கென ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறது. 

தன் வழியாக செல்கின்ற டிரான்சாக்ஷன் (Transaction) அதாவது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தக் கட்டணம் அமையும். 

இந்த வாரம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள். பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அக்யூரர் வங்கிகள். கார்டை வழங்கிய இஷ்யூவர் வங்கிகள், இரண்டையும் இணைக்கும் பேய்மென்ட் இடைமுகம். அவ்வளவு தான். 


Viewing all articles
Browse latest Browse all 490

Latest Images

Trending Articles



Latest Images