Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

பேமென்ட் டொமைன் – 2

$
0
0

Image result for off-us transaction

உங்களுடைய கார்டை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். பதினாறு இலக்க எண் ஒன்று, அது தான் உங்களுடைய கார்ட் நம்பர்.

இரண்டாவது பேய்மென்ட் ஸ்கீம் (Payment Sceme) அதாவது உங்களுடைய கார்ட் எந்த பேய்மென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானது எனும் விஷயம். அது விசாவாகவோ, மாஸ்டர்கார்ட் ஆகவோ, டிஸ்கவர் ஆகவோ, ஜேசிபி ஆகவோ எதுவாகவும் இருக்கலாம்.

பி.ஓ.எஸ் மெஷினில் நாம் ஆரம்பிக்கிற ஒரு பரிவர்த்தனை அக்யூரர் (வாங்குபவர் ) வங்கிக் கணக்கை தொடர்பு கொள்ளும். அவர்கள் இந்தப் பரிவர்த்தனை விவரத்தை எந்த பேய்மென்ட் ஸ்கீமுக்கு அனுப்ப வேண்டுமோ அதற்கு அனுப்புவார்கள். அதற்கு அவர்களுக்கு இந்த கார்ட் எண் பயன்படுகிறது.

உதாரணமாக உங்கள் கார்ட் எண் 5ல் ஆரம்பிக்கிறது என்றால் அது மாஸ்டர் கார்ட் க்கு உரியது. 4ல் ஆரம்பிக்கிறது என்றால் விசாவுக்கு உரியது. இப்படி மென்பொருட்களில் அதற்குரிய கட்டளைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். 

சில நேரங்களில் கடைகளில் ‘உங்க கார்டை பயன்படுத்த முடியாது சார்’ என்பார்கள். காரணம் அவர்களுடைய வங்கியோடு அந்த குறிப்பிட்ட பேய்மென்ட் சிஸ்டத்தை இணைக்கவில்லை என்பது தான். இணைக்கப்படாத கார்ட்களை பி.ஓ.எஸ் மெஷினில் பயன்படுத்தினால் அது ரிஜெக்ட் ஆகிவிடும்.

இப்போது பேய்மென்ட் சிஸ்டம் உங்களுடைய பரிவர்த்தனையைப் பார்த்து எந்த வங்கிக்குச் சொந்தமான கார்ட் அது என்பதைக் கண்டு பிடிக்கும். அதற்காக அவர்கள் பயன்படுத்துவது பி.ஐ.என் (பின்) எனப்படும் பேங்க் ஐடன்டிபிகேஷன் நம்பர். வங்கியை அடையாளப்படுத்தும் எண் என புரிந்து கொள்ளலாம். 

இந்த எண்ணை முதலில் வங்கிகள் தங்களுடைய பேமென்ட் சிஸ்டத்தில் இணைத்து வைத்திருக்கும். அதனால் ஒரு பரிவர்த்தனை பேய்மென்ட் சிஸ்டத்துக்கு வந்த உடனேயே இது எந்த வங்கிக்குரியது என்பதை அது புரிந்து கொள்ளும்.  இதற்காக அட்டையிலுள்ள முதல் ஆறு இலக்க எண்களை அது பயன்படுத்தும். அது தான் பி.ஐ.என் (BIN – Bank Identification Number ) எண்.  

பேய்மென்ட் சிஸ்டம் உங்களுடைய பரிவர்த்தனையை கார்ட் வழங்கிய வங்கிக்கு அனுப்பின பின்பு தான் உங்களுடைய வங்கிக் கணக்கு சரியானதா ? நீங்கள் கொடுத்த கார்ட் சரியானதா ? நீங்கள் உள்ளீடு செய்த பின் நம்பர் சரியானதா ? உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா ? உங்களுடைய கார்டில் லிமிட் உள்ளதா போன்ற சகல விதமான சோதனைகளும் நடக்கும். 

இந்த சோதனைகள் முடிந்தபின் இஷ்யூயர் வங்கி ஒரு பதிலை பேய்மென்ட் சிஸ்டத்துக்கு அனுப்பும். பேய்மென்ட் சிஸ்டம் அதை வாங்கி அக்யூரர், அதாவது பி.ஓ.எஸ் இணைக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பும். அந்த வங்கி பி.ஓ.எஸ் மெஷினுக்கு அனுப்பும். அப்போது நமது பரிவர்த்தனை ஒரு சுற்று முடிவுக்கு வரும். பி.ஓ.எஸ் மெஷின் ஒரு சிலிப்பை பிரிண்ட் செய்து நமது கைகளில் தரும். 

சுருக்கமாக, நீங்கள் பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பிக்கும் பரிவர்த்தனை, அக்யூரர் வங்கிக்குச் சென்று, அங்கிருந்து பேய்மென்ட் சிஸ்டத்துக்குச் சென்று, அங்கிருந்து இஷ்யூயிங் வங்கிக்குச் சென்று, பல சோதனைகளை நடத்தி, மீண்டும் பேய்மென்ட் சிஸ்டத்துக்கு வந்து, அங்கிருந்து அக்யூரர் வங்கிக்கு வந்து, கடைசியில் நமக்கு முன்னால் இருக்கின்ற பி.ஓ.எஸ் மெஷினுக்கு வரும். 

இத்தனை செயல்களும் சில வினாடிகளில் நடந்து முடியும். முடிய வேண்டும் ! 

இந்த பரிவர்த்தனை பயணத்தில் இரண்டு வகைகள் உண்டு. வாங்குகிற வங்கியும், வழங்குகிற வங்கியும் ஒரே வங்கியாய் இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய வங்கிக் கணக்கு இந்தியன் வங்கியில் இருக்கிறது, நீங்கள் பயன்படுத்திய பி.ஓ.எஸ் மெஷினும் இந்தியன் வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். வேலை ரொம்ப ஈசி ! அவர்களுடைய நெட்வர்க்கே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளும். இதற்கு பேய்மென்ட் சிஸ்டத்தைத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. இதை ஆன்‍_அஸ் (On-US) டிரான்சாக்ஷன் என்பார்கள். 

பி.ஓ.எஸ் இணைக்கப்பட்டுள்ள வங்கியும், உங்களுடைய வங்கியும் வேறு வேறு வங்கிகள் எனில் பேய்மென்ட் சிஸ்டம் நிச்சயம் தேவை. இத்தகைய பரிவர்த்தனைகளை ஆஃப் அஸ் (Off-US) பரிவர்த்தனைகள் என்பார்கள். 

( அடுத்த வாரம் )


Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles