0
அந்த
உயர்ந்த கட்டிடத்தை
எழுப்பியதிலும்,
அந்த
அகலமான
வீட்டு மனைகள்
அமைத்ததிலும்,
அந்த
பாலத்தைக்
கட்டியதிலும்,
எங்கள்
வியர்வை ஈரம்
கணக்கின்றி
வழிந்திருக்கிறது.
அடிக்கல் நாட்டியவர்களையும்
நன்கொடை
நல்கியவர்களையும்
மட்டுமே
கல்வெட்டுகள்
கெளரவப் படுத்துகின்றன.
எந்தக் கல்வெட்டும்
சுமந்ததில்லை
உழைத்தவரின்
பெயர்கள்.
