உன்னைச்
சந்தித்தபோது
மெல்லப் புன்னகைத்தேன்
உற்சாகக் கண்களோடு
உற்று நோக்கினேன்.
நீயோ
நான்
புறக்கணித்ததாய்ப்
புலம்பியிருக்கிறாய்.
காதுவரைக்கும்
உதடுகள்
இழுத்துப் பிடிக்கவில்லை தான்,
சத்தம் எறிந்து
உன்னைச்
சந்திக்கவில்லை தான்,
தெரிந்திருக்கவில்லை
எனக்கு.
அடையாளங்களே அவசியமென்று
தெரிந்திருக்கவில்லை
எனக்கு.
மெல்லிய புன்னகையில்,
கண்களில் மிதந்த
மனசில்,
கண்டு கொண்டிருப்பாய்
என்று நினைத்தேன்.
இன்னொரு முறை
வா.
மனதை வாசிக்க மனமற்ற
உனக்காய்,
முகத்தை
நாடக மேடையாக்குகிறேன்.
*
0
