Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

பெண்கள் : வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

$
0
0

 Image result for Working from home Women

  1. சமையல் திறமை இருந்தால் வீடுகளில் இருந்தபடியே ஊறுகாய், வடகம், அப்பளம் என போட்டுத் தாக்கலாம். காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பெண்களுக்கான நவேலை இது.
  2. டே கேர் செண்டர் ஆரம்பிக்கலாம். கணவனும் மனைவியும் அலுவலகம் ஓட, குழந்தைகளை எப்படி கவனிப்பதென கைகளைப் பிசையும் தம்பதியர் தான் உங்கள் கஸ்டமர். பொழுது சிறப்பாகப் போகும், வருமானம் வஞ்சகமில்லாமல் வந்து சேரும் !
  3. நல்ல டைப்பிங் தெரிந்தால் டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே தரும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து ஏற்றவேண்டும். பெரும்பாலும் அது தான் வேலை !
  4. “ஆன்லைன்” கால் செண்டர் வேலைகள் வீட்டிலிருந்தபடியே கூட செய்ய முடியும். அதற்கான இடங்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து முயன்றால் பலன் கிடைக்கும்.
  5. டிரான்ஸ்கிரிப்ஷன் ஒரு நல்ல வேலை. ஒலிவடிவில் வரும் பைல்களைக் கேட்டு அதை வார்த்தைகளாக டைப் செய்ய வேண்டும். அது தான் வேலை. ஆனால் என்ன, குரல் சொல்வதைப் என்பதைப் புரிந்து கொள்ள சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒரு வார்த்தைக்கு இத்தனை காசு என நல்ல லாபம் தரக்கூடிய வேலை.
  6. கைவினைப் பொருட்கள் செய்வதும் நீண்டகாலமாக பெண்கள் வெற்றிகரமாகச் செய்து வரும் ஒரு வேலையே.
  7. வெட்டிங் பிளானர் – என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. கார்ட் எங்கே அச்சடிக்கலாம் முதல் சாம்பார் எங்கே சமைக்கலாம் என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.
  8. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது ஒரு நல்ல சுவாரஸ்யமான வேலை. கேக் டெக்கரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.
  9. கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா ? பத்திரிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கார்ட்டூனிஸ்டாகக் களமிறங்கலாம்.
  10. நல்ல டிரெய்னிங் திறமை இருந்தால் நிறுவனங்களுக்கு டிரெயினராகப் போகலாம். பல நிறுவனங்கள் தேவைக்கேற்ப நிறுவனங்களுக்குச் சென்று டிரெயினிங் எடுக்கின்றன.
  11. ஃபாஷன் டிசைனிங் – வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம்.
  12. செல்லப்பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. செல்லப்பிராணிகளுக்குப் பயிற்சி கொடுப்பது ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 200 ரூபாய் பெற்றுத் தரும். இதற்கு அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் கேனல்களில் தொடர்பு கொள்வது மிகவும் முக்கியமானது.
  13. டெய்லரிங் பெண்களுக்குப் பொருத்தமான வேலை. நன்றாகக் கற்றுக் கொண்டால் வீட்டில் இருந்தபடியே நன்றாகச் சம்பாதிக்கலாம்.
  14. டெய்லரிங் போலவே எம்பிராய்டரி போடுவதும் ஒரு நல்ல வேலை. சரியான பயிற்சி இருக்க வேண்டியது முக்கியம்.
  15. “கிளாஸ் பெயிண்டிங்” இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும். கண்ணாடி பெயிண்டிங்கில் கலக்கலாம்.
  16. ஃபாஷன் ஜூவல்லரி உருவாக்குவது இப்போதைய சூப்பர் பிஸினஸ். வேலையில் இருக்கும் பெண்கள் கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி நல்ல காசு பார்க்கிறார்கள். இதற்கும் பயிற்சி நிலையங்கள் எக்கச் சக்கமாக உள்ளன.
  17. வீட்டைச் சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால், நல்ல செடிகளுடன் கூடிய நர்சரி வைக்கலாம்.
  18. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைத்தளங்கள் உருவாக்குவது தான் இந்த வேலையே. ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.
  19. யோகா நன்றாகத் தெரியுமெனில், ஒரு யோகா டீச்சர் ஆகிவிடுங்கள். உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி. நல்ல வருமானமும் வரும்.
  20. “புரூஃப் ரீடிங்” , எடிட்டிங் போன்ற வேலைகள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். பதிப்பகங்கள், நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். இன்றைய இண்டர்நெட் வாழ்க்கை ஆன்லைன் புரூஃப் ரீடிங்கை வளமாக்கியிருக்கிறது.
  21. பல மொழிகளில் உங்களுக்குப் புலமை இருக்கிறதா ? நீங்கள் லக்கி தான். இன்றைக்கு டிரான்ஸ்லேஷன் வேலைக்கு நிறைய தேவை இருக்கிறது ! வீட்டில் இருந்தபடியே செய்யலாம் இதை.
  22. முன்பணம் அனுப்புங்கள், வேலை உங்கள் வீடு தேடி வரும் என வரும் அழைப்புகளை நிராகரியுங்கள். எந்த தொழிலில் இறங்கும் முன்னரும் முழுமையான புரிதலுடன் இறங்குங்கள்.
  23. கிராமப்புறப் பெண்களுக்கு கயிறு திரித்தல், பாய் முடைதல், பனை ஓலையில் கலைப் பொருட்கள் செய்தல் என வாய்ப்புகள் பல.
  24. ஊதுபத்திகள் செய்வது மத நம்பிக்கை இருக்கும் வரை லாபமான பிசினஸ் தான். அதற்குரிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் எளிதில் செய்ய முடிகின்ற வேலை தான்.
  25. மிதியடிகள் செய்வது ஒரு நம்பிக்கை தரும் வேலை. துணி, கயிறு, நைலான், என பல்வேறு பொருட்களைக் கொண்டு மிதியடிகள் செய்யலாம். விற்பனைக்கான வழியை முடிவு செய்த பிறகே இதில் இறங்குங்கள்.
  26. இ-பே போன்ற நம்பிக்கையான வலைத்தளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த இ-பே செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.
  27. நீங்களே ஒரு வலைத்தளம் உருவாக்கலாம், அது பிரபலமாகிவிட்டால் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம். அதிலேயே ஆன்லைன் ரேடியோ ஆரம்பிக்கலாம். இவற்றுக்கெல்லாம் விளம்பரங்கள் மட்டுமே வருமானம். எனவே முன் அனுபவம் உடையவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
  28. வீட்டுத் தயாரிப்பாக அழகுப் பொருட்கள், பாட்டி வைத்திய மருந்துகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
  29. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும் அதற்குரிய விற்பனை வழிகள் உண்டா என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தப் பொருள் அந்த சூழலுக்குத் தேவையானது தானா ? அதை மக்கள் வாங்குவார்களா எனும் ஒரு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.
  30. எவ்வளவு பணம் தேவைப்படும் என கணக்கிடுங்கள். அதைப் போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணம் செலவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  31. தோல்வி குறித்த பயமின்மையும், சரியான தெளிவும், போதிய பண வசதியும் சிறு தொழில்கள் துவங்க முக்கியமான மூன்று தேவைகள்.
  32. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது திறமையானவர்களுக்கு ஒரு நல்ல பிசினஸ்.
  33. கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் தெரிந்தால் வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். இது கம்யூட்டருக்கு என்றல்ல, எந்தெந்த ஏரியாவில் ரிப்பேர் பார்க்கும் திறமை உண்டோ அதிலெல்லாம் நுழையலாம்.
  34. விளம்பர நிறுவனங்களுக்கு டிசைன் செய்து கொடுப்பது, வாசகங்கள் வடிவமைத்துக் கொடுப்பது போன்ற விளம்பர நிறுவனம் சார்ந்த பல வேலைகள்.
  35. பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு நல்ல இடத்தில் இருந்தால் ஆரம்பிக்கலாம். அதற்குரிய பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம்.
  36. அனிமேஷன் வேலைகள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து செய்யக்கூடிய வகையில் வந்து விட்டன. முன் அனுபவம் உடைய யாரையாவது அணுகினால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  37. குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுப்பது ஒரு நல்ல வேலை. அளவான வருமானத்துக்கும், பொழுது போக்குக்கும் உத்தரவாதம்.
  38. நல்ல சமையல் கில்லாடியெனில் சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்துப் பாருங்களேன். புதுமையாகவும் இருக்கும், சமைக்கத் தெரியாதவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும் !
  39. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மை தயாரிக்கலாம்.
  40. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் – இளம் பெண்கள் திறமையாய் செய்யக் கூடிய ஒரு வேலை. பெரிய நிறுவனங்களுடன் கை கோர்த்துக் கொண்டால் இலட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம் !
  41. பறவைக் கூடுகள், மீன் தொட்டிகள் போன்றவற்றை அழகாக வடிவமைத்து விற்கலாம்.
  42. பொக்கே, பலூன் பொம்மை போன்றவை தயாரிக்கலாம்.
  43. போட்டோ பிரிண்டிங், பிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். கொஞ்சம் முதலீடு இதற்கு அவசியம்.
  44. வீடு, அலுவலகங்கள் போன்றவற்றின் – இண்டீரியர் டிசைனர் வேலை, இதற்கு அனுபவமும், விருப்பமும், பொறுமையும் தேவை.
  45. செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது, பெட் ஷாப் வைப்பது, டிரெயிங் கொடுப்பது என செல்லப்பிராணிகளைச் சுற்றி நிறைய வேலைகள் செய்யலாம்.
  46. வேலைக்கான வழிகாட்டுதல், ரெஸ்யூம் தயாராக்குதல், கன்சல்டன்சி வைத்தல் என புதியவர்களுக்கு வழிகாட்ட நிறைய வேலைகள்.
  47. போட்டோக்களை வீடியோக்களாக்குவது, வீடியோவில் எடிட்டிங் செய்வது என கம்ப்யூட்டர் சார்ந்த சில வேலைகளைத் திட்டமிடலாம்.

Thanks : Devathai, Monthly



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!