கருப்புக் கண்ணாடி
கண்களில் மாட்டி.
கைத்தடியின் சத்தத்தில்
காதுகளால் பார்த்து
சாலை கடக்க முயன்று முயன்று
தோற்றுப் போகும் நெரிசல் கணங்களில்
ஏதோ ஒர் மென்கரம் என் கரம்பற்றும்
மனசு நிறைந்து நன்றி பீறிடும்
பார்வை
சிலருக்காவது
இன்னும் இறக்காமலிருக்கிறதே என்று.