0
நன்றாக இருக்கிறது
என்று
நிறையவே சாப்பிட்டாய்
வாங்கிய சந்தையைச்
சொல்லும் வரை.
கூந்தலில் சூடிக் கொள்ள
தயக்கம் கொள்ளவேயில்லை
செடியின்
தாய்வீட்டைச் சொல்லும் வரை.
இப்போது
எல்லாவற்றையும்
நிராகரிக்கிறாய்.
சுவையும்
மணமும்
உனக்குப் பிடித்தே இருந்தது.
ஆனாலும்
பிடிவாதமாய் மறுக்கிறாய்.
யார் எழுதியதானாலும்
கடைசியில்
கைழுத்திடுவது
யாரென்பதே முக்கியமுனக்கு.
சிரிப்பு தான் வருகிறது
சிப்பி பிடிக்காது என்பதற்காய்
முத்தை நிராகரிக்கும்
உன்
முட்டாள் தனம்.
