0
வாசலிலேயே
நிறுத்தப் படுகிறேன்
நான்.
நீ
காசு போட்டு வளர்க்கிறாய்
இரண்டு நாய்களையும்
ஒரு
காவலாளியையும்.
உன்
குறட்டையையும்
பாதுகாக்கும்
கடமை அவர்களுக்கு.
சன்னல் வழிக்
கசிகிறது
உன்
தொலைக்காட்சி ஒலி.
அவ்வப்போது
தொலைபேசுகிறாய்.
சத்தமாக சிரிக்கிறாய் !
எல்லாம்
கேட்டுக் கொண்டும்
கைகளைக்
கட்டிக் கொண்டும்
காத்திருக்கிறேன்
நான்.
நீ
வெளிவரவுமில்லை
என்னை
உள்ளே அனுமதிக்கவும்
இல்லை.
ஏமாற்ற இருளில்
ஏறித் திரும்புகிறேன்.
கதவுகள் இல்லாமல்
கட்டியிருக்கலாம்
நீ
உன் உயரமான
மதில் சுவரை !
