0
அழகிய படகொன்றை
உன்னிடம் கண்டேன்
நீயோ
அதை
கிணற்றுக்குள் மட்டுமே
ஓட்டிக் கொண்டிருக்கிறாய் !
அழகிய
பறவையொன்றையும்
கண்டேன்.
நீ
அதைக்
கூண்டுக்குள் மட்டுமே
பறக்க விடுகிறாய்.
அப்படியே,
மீன்களையும்,
முயல்களையும்
ஒரு சில
அழகிய மயில்களையும்.
பட்டத்தை
நூலில் கட்டவேண்டுமென்பது
சரிதான்
அதற்காக
ஒருமுழம் நூலிலா ?
எல்லைகளை
அவிழ்த்து விடு
திறமைகள்
சட்டத்துக்குள் பாதுகாக்க அல்ல !
0
