ஆணி அடிக்கப்பட்ட திறமைகள்.
0 அழகிய படகொன்றை உன்னிடம் கண்டேன் நீயோ அதை கிணற்றுக்குள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறாய் ! அழகிய பறவையொன்றையும் கண்டேன். நீ அதைக் கூண்டுக்குள் மட்டுமே பறக்க விடுகிறாய். அப்படியே, மீன்களையும்,...
View Articleபாராட்டு
வீட்டை கண்ணாடி போல் துடைத்து, பாத்திரங்களைப் பளபளப்பாக்கி, அழுக்குத் துணிகளை அழகுத் துணிகளாக்கி வைக்கும் வேலைக்காரச் சிறுமிக்கு ஒரு பாராட்டு வழங்காத நாம் தான் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கவில்லையென...
View Articleபள்ளிக்கூடக் கவிதைகள்
வழிதேடுகிறேன் ஃ முதல் நாளே பென்சிலைத் தொலைச்சுட்டேன், அப்பா கேட்டால் அடிப்பார், அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும், பக்கத்து சீட் பையனிடம் இருக்குமா உபரியாய் இன்னொன்று ? அல்லது, ஒத்துக் கொள்வானா ?...
View Articleமனிதருக்குச் சிறகில்லை.
இந்த மரத்துக்கும் எனக்கும் தலைமுறைப் பழக்கம். நான் சிறகு விரித்ததும் என் அடைகாப்பின் அடைக்கலமும் இந்த மரம் தான். இதன் கடந்த கால இலைகளுக்கும், நிகழ்கால முளைகளுக்கும் என் அலகுகள் வாழ்த்துச் சொன்னதுண்டு....
View Articleநெருக்குதல்கள்
கவிதை எழுத மறந்து விட்டேன். எத்தனை முயன்றும் வரவில்லை. என் கவிதைச் செடிகளுக்கு செயற்கைத் தண்ணீர் பச்சையம் தரப் போவதில்லை. என் விரல்களின் நுனிகளில் இறுகக் கட்டியிருந்த வீணை நாண்கள் வெறும் கம்பிகளாய்...
View Articleகவிதை : நரகம்
ஆழத்தில் எட்டிப் பார்க்கிறேன், எங்கும் நெருப்பு நாக்குகள் நெடுஞ்சாலை அகலத்தில் நிமிர்ந்து நிற்கின்றன. தரைமுழுதும் கனல் கம்பளம் பெரும்பசியோடு புரண்டு படுக்கிறது. மரண அலறல்கள் வலியின் விஸ்வரூபத்தை...
View Articleநேசிய கீதம்
பாட்டி, இன்னும் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள். நீ சொன்ன இடம் தூரமில்லை. நீ நடக்கவேண்டாம். அங்கே செல்வதற்குள் உன் பாதத்தின் சுவடுகளில் மரணம் வந்து படுத்துக் கொள்ளலாம். நான் சுமக்கின்றேன், எம்...
View Articleபோலித் தீர்க்கத்தரிசி.
அந்த அறை கவலை முகங்களால் அடுக்கப்பட்டு கலைந்து கிடந்தது. அழுவதற்காகவே தயாரிக்கப் பட்ட கண்களோடு காத்துக் கிடந்தது கூட்டம். அவர்களின் கவலைக் கைக்குட்டைகள் காய்ந்திருக்கவில்லை, கடலில் விழுந்த பஞ்சு...
View Articleகவிதை : பிரார்த்தனைகள்
கைக் குழந்தையுடன் சில்லறைக் கைகளுடன், அவள் சாலையைக் கடக்கையில் வாகனங்கள் மோதிவிடக் கூடாதே என்று ஒரு பிரார்த்தனை பிறக்கும். தண்ணி லாரியின் பின்னால் பரபரக்கும் ஆம்புலன்ஸ் சத்தமும், தடுமாறியபடி வேக...
View Articleகவிதை : காதலிப்போர் கவனத்துக்கு…
காதல் தோற்றுப் போனால் தாடி வளர்ப்பதை வழக்கமாக்காதீர், தாடி முளைக்கத் துவங்காத நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக் கூடும். காதலி என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர் வேறு யாருடனோ காஃபி குடிப்பதைக்...
View Articleஇயலாதவையே இயல்பு
ஏதேனும் வழியிருக்குமா ? நம் மாலை நேரப் பேச்சுகளை இரவு வந்து இழுத்து மூடக் கூடாது நாம் கைகோர்த்துக் கடக்கையில் சாலையின் நீளம் முடியவே கூடாது. நாம் பார்த்துக் கொள்ளும் பொழுதுகள் பிரியவே கூடாது. உன்...
View Articleசிந்தையில் தை.
இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைத் துரத்தி கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி...
View Articleகவிதை : சுதந்திரம்
அடிமை வாழ்வை அனுபவித்தவரைமட்டுமே உச்சிக்குக் கொடி ஏற்றி மகிழச் செய்யும் விழா இது. வெயிலின் முந்தானை மூடாதவர்க்கெல்லாம் இந்த நிழலின் துண்டு வியர்வை துடைக்காது தான். தோட்டத்தில் கனியில்லை என்ற கவலை தான்...
View Articleதுக்கவெள்ளி
மரச் சிலுவையில் மனிதாபிமானம் அறையப்பட்ட நாள். பூப் பூத்த குற்றத்துக்காய் பூச் செடிக்கு தீச் சூளை பரிசு. பாதைகளை செதுக்கியதற்காய் பாதங்களுக்கு மரண தண்டனை. சுட்டது என்பதற்காய் சூரியனுக்குச் சிறைச்சாலை....
View Articleதமிழ்ப் புத்தாண்டு…
தமிழா…. இதோ உனக்கு இன்னுமோர் புத்தாண்டு. திரைப்பட வெளியீடுகள் மட்டும் தேடி இந்தப் பகலை எரித்து விடாதே. தள்ளுபடிக் கடைகளின் வாசலில் இந்த நாளை தள்ளி நகர்த்தாதே. இந்த ஒருநாள் விடுமுறை தூக்கத்துக்காய்...
View Articleபொங்கல்
0 எந்தையும் தாயும் சிந்தையில் தாங்கி பொங்கிய தையே வா. அவர் சிந்திய சிரிப்பின் தங்க முலாமில் இயங்கிய தையே வா. 0 வாங்கிய காற்றும் ஏங்கிய நாற்றும் பொங்கிய தையே வா. சிறு முற்றம் முழுதும் சுற்றம் சூழ ஊற்றிய...
View Articleவிசுவாசம்
கிறிஸ்தவத்தின் வேர்கள் நம்பிக்கையின் மீது நங்கூரமிறக்கியிருக்கிறது. கவலை இருட்டின் கூர் நகங்கள் நகரும் புலப்படாப் பொழுதுகளின் வெளிச்சமும், தோல்வித் துடுப்புகள் இழுத்துச் சென்ற பேரலைப் பொழுதுகளின்...
View Articleகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள். உன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்க எத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கி தத்தளிக்க வைக்கிறாய்....
View Articleசென்னையில் ஒரு மழைக்காலம்
. . . நுரைகளை ஒதுக்கி விட்டுக் கரைகளைத் தாண்டியது கடல். காங்கிரீட் வனத்துக்குள் பாதை போட்டுப் பாய்ந்தோடியது நதி. என் பூர்வீகம் எங்கே என மாடியை எட்டிக் கேட்டது ஏரி பழு தாங்கும் வலு இல்லையென அழுது...
View Articleஅதிர்ஷ்டம்
மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சிறகுகள் கருப்பாகிச் சரிந்த போதும், தேடி நடந்த இடமாற்றம் கடலில் விழுந்த...
View Article