தமிழா….
இதோ
உனக்கு
இன்னுமோர் புத்தாண்டு.
திரைப்பட வெளியீடுகள்
மட்டும் தேடி
இந்தப் பகலை
எரித்து விடாதே.
தள்ளுபடிக் கடைகளின்
வாசலில்
இந்த நாளை
தள்ளி நகர்த்தாதே.
இந்த
ஒருநாள் விடுமுறை
தூக்கத்துக்காய் வழங்கப் பட்ட
துக்க தினமல்ல.
உன்
சோம்பேறித் தனத்தை
சொறிந்து கொள்ளக் கிடைத்த
நக நாளும் அல்ல.
இது,
உள்ளொளிப் பயணத்துக்கான
ஒரு நாள்.
ஒரே ஒரு கேள்வி
உன்னையே கேட்டுப்பார்,
தாண்டிப் போன வருடத்தில்
தமிழனாய் தான்
இருந்தேனா என்று.
