0
எந்தையும் தாயும்
சிந்தையில் தாங்கி
பொங்கிய தையே வா.
அவர்
சிந்திய சிரிப்பின்
தங்க முலாமில்
இயங்கிய தையே வா.
0
வாங்கிய காற்றும்
ஏங்கிய நாற்றும்
பொங்கிய தையே வா.
சிறு
முற்றம் முழுதும்
சுற்றம் சூழ
ஊற்றிய தையே வா.
0
ஞாயிறு வானில்
தோன்றிய நேரம்
பொங்கிய தையே வா.
இனி
எங்கள் சோகம்
தூங்கிட வேண்டும்
தென்றல் தையே வா.
0
செங்கல் தேசம்
எங்கள் தேசம்
பொங்கிய தையே வா.
நீ
பொங்கிப் போவது
தங்கிட வேண்டும்
புன்னகைத் தையே வா
0
